தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்கு
முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும்,பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து சர்வதேசத்தின் கவனத்தையீர்க்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்படி இன்று காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உண்மையிலேயே இந்த உண்ணாவிரதப் போராட்டமானது உலகத்தை ஏமாற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு கோமாளி வித்தையாகவே உள்ளது. காரணம் இன்று நாட்டில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தழிழர்கள் வாழும் கிழக்கு பகுதியானது பாரிய அளவில் சீர்குலைந்தள்ளது.
வடக்கு கிழக்கு தாயம் என்று பேசும் தமிழ் தேசியம்பேசும் தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை விட்டு இன்று ஒரு நாள் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பதென்பது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்த உண்ணாவிரதம் என்பது பாராளுமன்றில் குறைந்த விலையில் கோழிகளையும் வகை வகையான உணவுகளையும் உண்டு கொழுப்பு எடுத்துப் போயிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழுப்பை கரையும் ஒரு உடற்பயிற்சியாகவும் உடம்பு குறைக்க அத்தியவசியமான உணவு தவிர்ப்பாகவும் உள்ளது.
இந்து மதம் உட்பட அனைத்து மதங்களிலும் உபவாசம் என்பதும் அனைவராலும் அனுஷ்டிக்கப்படுகின்ற ஒன்றாக உள்ளது. சாதாரண ஒரு இந்து பெண்ணொருவர் வருடத்தில் மிக குறைந்த விரதங்களை அனுஷ்டித்தாலும் சுமார் 100 நாட்கள் உணவினை தவிர்க்க வேண்டியிருக்கும். அப்படி மக்களே 100 நாட்கள் வருடத்தில் சாதாரண இருக்கும் போது இவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது வேடிக்கையாக உள்ளது.
இன்று நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரதத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. உண்மையிலேயே இன்று யாழ்.பல்கலைக்கழகம் மூடியுள்ளதற்கும், மாணவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதற்கும் காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் புலியை வைத்து அரசியில் நடத்தும் சக்திகளும் தான். இப்போது பல்கலைக்கழக மாணவர்களை முற்றாக அரசியலுக்குள் இழுப்பதென்பது அவர்களின் எதிர்காலங்களை நாசம் செய்யும் ஒரு நடவடிக்கை.
வன்னியில் எத்தனையோ மக்கள் பசியாலும் பட்டினியாலும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உதவி செய்ய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரா? மாணவர்களை உசுப்பேத்தி விட்டு அவர்களை வைத்து அரசியல் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாணவர்களின் விடுதலை வலியுறுத்துவதாக கூறி இன்னமும் மாணவர்களை சிக்கலில் மாட்டியே விடுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது மக்கது மாணவர்களதும் வாழ்க்கையை நாசம் செய்கின்றது என்பது இது ஒரு உதாரணமாகும். இன்று பாதிக்கப்பட்ட மக்கள் கிழக்கில் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை அழைத்து செல்ல தழிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரா? அங்கு சென்று இடிந்த வீடுகளை திருத்தவும் விழுந்து போன கொட்டில்களை கட்டிக்கொடுக்கவும் மாணவர்களை பயன்படுத்த த.தே.கூ தயார் என்றால் இலங்கை நெற் இன் செலவில் வாகனங்களை ஒழுங்கு படுத்த நாம் தயாராகவே உள்ளோம்.
தொடர்ந்தும் வாக்களித்த மக்களை ஏமாற்றி இரத்தங்களை சூடாக்கி இருப்பதையும் அழித்து உண்ணாவிரம், போராட்டம் என்று வித்தை காட்டுவதை விடுத்து மக்களுக்கு பயனுள்ள விடயங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யுமானால் அதற்கு நாமும் உதவி செய்ய எப்பவும் தயாராகவே உள்ளோம்.
They continue with the same dramatic shows specially it is under the statue of the founder of FP party in order to attract the people.It's enough,tamils are completely disgusted and frustrated with the same old shows . Tamils do have a good knowledge in politics now.Do something creatively that's what the tamil people needed now.Politically motivated propaganda shows will not be entertained by the present tamil generation.This is understandable
ReplyDeleteThe dramatic shows for 2012 are already nearing its completion.Now they will start new shows for 2013.Fans have to wait.
ReplyDelete