பாதுகாப்பு செயலர் – யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் சந்திப்பு.
யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரணநிலை தொடர்பில் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பாதுபாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாக தரப்பிலிருந்து உபவேந்தர் திருமதி அரசரெட்ணம் மற்றும் ஐந்து பீடங்களுக்குமான பீடாதிபதிகள் உட்பட பல்கலைக்கழக உயரதிகாரிகள் சிலரும் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் செயலாளார் கோத்தபாய ராஜபக்ச , யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டதாக அறியக்கிடைக்கின்றது.
சந்திப்பின்போது அண்மையில் ஏற்பட்ட அசாதரண நிலை தொடர்பில் விரிவாக ஆரயப்பட்டுள்ளதுடன் யாழ் மாணவர்கள் தமது கல்வியினை எவ்வித தங்கு தடையுமின்றி தொடர்வதற்கான சகல ஏற்பாடுகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படுமென உறுதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment