தந்தை செல்வா நினைவு சதுக்கத்திற்கு அருகில் சடலம் மீட்பு
யாழ். துரையப்பா விiளாயாட்டரங்கிற்கு அருகிலுள்ள கழிவு நீர் வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை யாழ்ப்பாணப் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்காலுக்குள் இருந்தே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் 40 வயது மதிக்கத்தக்க ஆணினுடையது என தெரிவிக்கப்பட்ட போதிலும் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்நபர் மது போதையில் தவறி வாய்க்காலுக்குள் விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 comments :
Deaths under tragic circumstances are very common in jaffna,this is really an alarming rate of unnecessary deaths.Why not the the authorities concern not taking preventive measures to stop this unnecessary deaths.Vigilant people committees can do atleast to stop this disasters.Inquiries and reports are usual procedure,that's all.What's the use.The deaths could cause the repective family members a lot,which is unexplainable
Post a Comment