Tuesday, December 11, 2012

க.பொ.த சாதாரண பரீட்சைகள் இன்று ஆரம்பம்

நாடாவிய ரீதியில் க. பொ. த. சாதாரணதரப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. இன்று ஆரம்பமாகும் பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இவ்வருடம் 5 இலட்சத்து 42 ஆயிரத்து 260 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 48 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறும். இவற்றுக்கு மேலதிகமாக 537 இணைப்பு நிலையங்கள் 33 பிராந்திய சேகரிப்பு நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் கூறினார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக் கிழமை வரை பரீட்சைகள் தொடரவுள்ளன. இம்முறை 3 இலட்சத்து 87 ஆயிரத்து 593 பாடசாலை பரீட்சார்த்திகளும் ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 667 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com