Thursday, December 20, 2012

படம் பார்த்து கதை சொல்லுங்களேன்..

இங்கே படத்தில் காணப்படுபவர் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன். ஆயுதம் தாங்கிய மூன்று பொலிஸார். மூவரும் சிங்களவர்கள். அவர்களில் ஒருவர் குடைபிடிக்க தண்ணிக்குள் இறங்கி நின்று ஐயா போட்டோவுக்கு எப்படி போஸ் கொடுக்கின்றார் என்று தெரியுதோ?

இப்படி எத்தனை போட்டோ வருகின்றது இதைபற்றி ஏன் கவலைப்படுகின்றீர்கள் எனக்கேட்கலாம். காரணம் ஒன்று உண்டு. கிழக்கில் மக்களுக்கு உதவி செய்கின்றதுக்கு புலம்பெயர் தமிழரிடம் பணம் கேட்டுள்ளார் பூசாரியார். இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள வேண்டுதலில் வெள்ளத்தை கடந்து சென்று ஐயா உதவி செய்தாராம் என்று வேறு எழுதப்பட்டுள்ளது.

படம்பிடிக்கப்பட்டுள்ள சித்தாண்டி கோவிலடி பிரதேசத்தை சேர்ந்த மக்களிடம் நேரேசென்று ஐயா உங்களுக்கு என்ன உதவி செய்தவர் என்று கேட்டேன்;..

நாங்கள் இத்தனை காலமும் காணத ஒன்றை ஐயா காட்டினார் என்றார்கள்...

மனுஷன் ஏதோ செய்திருக்கின்றார் என்று சந்தோஷப்பட்டேன்.. ஏதாவது ரின்களில் அடைக்கப்பட்ட நல்ல சத்துணவுகளாக இருக்கும் என நினைத்து.. நல்லா இருந்ததா எனக்கேட்டேன்..

நல்லா இருந்ததா என்று கழுவி வந்தாத்தானே தெரியும் என்றார்கள்..

ஒன்றும் விளங்காமல் மூச்சிழுத்தேன்.. அவர்களுக்கு விளங்கிவிட்டது எனக்கு விளங்கவில்லை என்பது ..

படம் படம் என்றார்கள்..

ஓ ஹோ ஐயாவின் நவீன கமராவைப்பற்றித்தான் சொல்றாங்கள் என்பது விளங்கியது..

நானும் படம்பார்த்து விட்டுத்தான் அவர்களிடம் வந்திருக்கின்றேன் என்றத்தையும் சொன்னேன்...

அத்துடன் என்னதான் என்றாலும் நெஞ்சடிக்கு பிடிக்கின்ற தண்ணிக்குள்ளால ஐயா உங்களைப் பார்க்கவாவது வந்திருக்கின்றார்தானே என்றேன்..

அப்பதான் இந்த சோகத்துக்குள்ளையும் ஒருவர் கெக்களம்கொட்டி சிரித்தார்.

இந்த சிரிப்பு சாதாரணமானது அல்ல என்பதை கிரகித்து கொண்டு என்ன சிரிக்கின்றீர்கள் என்றேன்.

படத்துக்கு பெரிய கதையே உண்டு என்று மீண்டும் ஆள் சிரித்தது.. சொன்னால்தானே புரியும் என்றேன்..

ஐயா.. அரசாங்கம் கொடுத்த வரியில்லாத டொல்பின் வாகனத்திலை பின்பக்கத்தால பாதுகாப்பாக வந்து இறங்கினவர். இவ்விடத்திலிருந்து சுமார் 50 மீற்றருக்கு அங்கால ஒரு குறுக்கு போக்கு இருக்கு, அந்த இடத்தில்தான் தண்ணி பிடித்து கிடந்தது.. அதுக்குள்ள போய் இறங்கி நின்று ஐயா படம்பிடித்தவர் என்றார்..

எப்பிடி படப்பிடிப்பு என்று விளங்கினதோ இன்னும் சொல்லதேவையில்லை என நினைக்கின்றேன். ஊடனடியாக ஐயாவின் வேண்டுதலை ஏற்று அவர் வெளியிட்டுள்ள வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்பாதிங்கோ என்று சொல்வதற்கு எங்களுக்கு உரிமை இல்லை.

ஆனால் உண்மையை உரக்க சொல்லி உங்கள் சிந்தனையை தூண்டுவதில் தப்பு இல்லைத்தானே..

1 comments :

Anonymous ,  December 20, 2012 at 7:08 PM  

Good things are No cheap .Cheap thing are No Good.However in the commercial world cheap things need a big propaganda ,Now in these days politics too the same

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com