Sunday, December 30, 2012

தனியார் பஸ்கள் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு

யாழ். மாவட்ட சிற்றூர்த்தி சேவைச் சங்கங்கள் நாளை முதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்துள்ளார்.

அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை சாலை பஸ் சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது அச்சுவேலி சங்கத் தலைவர் தாக்கப்பட்டுள்ளதுடன் அச்சுவேலி பஸ் நடத்துனரின் வயிற்றில் போத்தலினால் தாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை சாலை தனியாக இயங்க ஆரம்பித்த பின்னர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நேரக்கணிப்பாளர்கள் கடமையில் அமர்த்தப்பட்டு வருகின்றார்கள். இந்த விடயம் தொடர்பாக அரசாங்க அதிபரிடமும் உரியஅதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

தொடர்ந்தும் இப்பிரச்சினை நடைபெற்றுக்கொண்டு இருப்பதால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியாத நிலை ஏற்படும் எனவே இப்பிரச்சினையில் உரியவர்கள் தீர்த்து வைக்கும் வரையில் இன்று திங்கட்கிழமை முதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்

1 comment:

  1. Compromise policy discipline courtesy manners are declining even in regard to very minor matters.It's funny how do they talk about big politics...?

    ReplyDelete