லயன் எயரின் பாகங்களையும் சடலங்களை தேட விரைந்தது விசேட குழு.
தமிழீழ விடுதலைப் புலிகளால் கடந்த 1998ம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் சடல எச்சங்களைக் கண்டுபிடிக்க பூநகரியில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்னதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சுட்டுவீழ்த்தப்பட்ட விமானம் பற்றி முன்னாள் போராளியொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விமானத்தில் பயணம் செய்தவர்களின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் பூநகரி கடற்கரையோரத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக குறித்த முன்னாள் போராளி தகவல் வழங்கியிருந்தார்.
இந்நிலையில்,புதைக்கப்பட்ட உடல்களை தேட புலனாய்வு அதிகாரிகளை கொண்ட சிறப்புக் குழு பூநகரிக்கு சென்றுள்ளது.
1998ம் ஆண்டு செப்டெம்பர் 29ம் திகதி பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கி 48 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் பயணித்த லயன் எயர் விமானம் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது.
0 comments :
Post a Comment