ஐ.எஸ்.ஓ 9001 மற்றும் 2008 தரச்சான்றிதல்களை பெற்றுக்கொண்டது இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு ஐ.எஸ்.ஓ 9001 மற்றும் 2008 தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.இந்த தரச்சான்றிதழ் கிடைத்ததை முன்னிட்டு அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் பாராட்டு வைபவமொன்று பத்தரமுல்ல ஜனகலா நிலையத்தில் இடம்பெற்றது. சர்வதேச தர நிறுவனத்தினால் வழங்கப்பட்ட தரச்சான்றிதழாக இது அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆற்றும் பணிகள் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி இந்த தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இதனை அமைச்சர் டிலான் பெரராவிடம் கையளித்தார்.
அர்ப்பணிப்புடன் செயல்பட்ட வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படடன. அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment