பாகிஸ்தானின்ச சிந்து மாகணம் உமார் கோட் மாவட்டத்தில் உள்ள குலாம் நபி ஷா நகரில் வசிக்கும் 6 வயது இந்து சிறுமியை மர்ம நபர்கள் சிலர் கடத்திச்சென்று பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளனர். இத் தகவலை அறிந்த உறவினர்கள் அவரை காரச்சி மருத்துவ மனைக்கு கொண்டுசென்றனர். இந்நிலையில் இந்த மனித தன்மையற்ற செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும், ஜானாதிபதி ஸர்தாரியின் மகனுமான பிலாவல் பூட்டோ சிந்து மாகண அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment