சிறைச்சாலைகளில் வைத்துள்ளள ரி-56 ஆயுதங்களை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்க உத்தரவு
இலங்கையின் சிறைச்சாலைகளில் காணப்பட்ட ரி56 ஆயுதங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பி.டபிள்யு. கொடிப்பிலி, சிறைச்சாலை பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்..
இவற்றை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ரி56 ரக துப்பாக்கிகளுக்கு பதிலாக ரிப்பீட்டர் ரக ஆயுதங்கள் சிறைச்சாலை பாதுகாப்பிற்காக வழங்கப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை அண்மையில் வெலிக்கடைச் சிறையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதிகள் ஆயுதக் களஞ்சியத்தை உடைத்து ரி56 ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அதிகாரிகளை தாக்கியிருந்தமையைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment