தற்கொலை செய்த தாதிக்கு 523,600 டொலர் நிதியுதவி - அவுஸ்ரேலிய வானொலி!
லண்டனில் இளவரசர் வில்லியம்சின் மனைவிக்கு சிகிச்சை அளித்த தாதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது குடும்பத்துக்கு அவுஸ்ரேலிய வானொலி நிறுவனம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக அவுஸ்ரேலிய வானொலி நிறுவன தொகுப்பாளர்கள், இளவரசரின் மனைவி கேத் பற்றி, அறிந்து கொள்ள அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு போன் செய்து, அரண்மனையில் இருந்து பேசுவதாகக் கூறி விவரங்களைக் கேட்டு அதனை வானொலியில் ஒலிபரப்பினர்.
தகவல் அளித்த தாதி ஜெசிந்தா இதனால் அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது குடும்பத்துக்கு அவுஸ்ரேலிய வானொலி நிறுவனம் 523,600 டொலரை இழப்பீடாக அளிக்க முன்வந்துள்ளது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெசிந்தாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
1 comments :
This compensation is nothing for a precious life.Let them make a big charity organisation in the name of the dead Royal Nurse,it may bring peace to her soul.
Post a Comment