515 கோடி ரூபா வருமானம் பெற்றுத்தந்த வெளிநாட்டு வேலைக்காரர்கள்!!
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையாளர்களினால் இவ்வாண்டில் இதுவரை 515 கோடி ரூபா நாட்டுக்கு வருமானமாக கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வருட ஆரம்பம் முதல் ஆகஸ்ட் மாதம் இறுதி வரையான காலப்பகுதிக்குள், குறித்த நிதி இலங்கைக்கு கிடைத்துள்ளதாக பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் குறிப்பிட்ட காலத்துடன் ஒப்பீடும்போது, இது 115.16 சதவீதமான வளர்ச்சியாகும். இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியென்றும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு, ஆசியா, வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களால் இவ்வாறு நிதி கிடைத்துள்ளது.
தற்போது 17 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். பயிற்சி பெற்ற தொழிலாளர்களை அதிகளவில் வெளிநாட்டுக்கு அனுப்புவதே, நோக்கமென, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment