Sunday, December 23, 2012

மீண்டும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த வாரம் கனெக்டிகட் மாகாணத்தில் நியூடவுனில் உள்ள தொடக்க பள்ளியில் புகுந்த வாலிபர் சுட்டதில் 20 குழந்தைகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்ட அதிர்ச்சி அலைகளை அமெரிக்காவில் முடிவதற்குள் பென்சில் வேனியா மாகாணத்தின் ஒதுக்குபுறத்தில் உள்ள கீசிடவுன் பகுதியில் நேற்று மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கி சூட்டை தடுத்த போலீஸ் அதிகாரிகளும் இவர்களால் சுடப்பட்டுள்ளதுடன் இந்த சந்தர்ப்பத்தில் பலர் காயம் அடைந்தநிலையில் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவருவதுடன் தற்போது அவர்களது நிலைமை சீராக உள்ளதாக பென்சில் வேனியாவின் பிளேர் பகுதியை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நியூடவுனில் சடைபெற்ற துப்பாக்கி சூட்டைத்தொடர்ந்து துப்பாக்கி வைத்திருக்கும் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் ஒலித்து வந்தாலும் அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டுக்கலாச்சாரம் ஓயவில்லை. பள்ளிக்கூட குழந்தைகளின் துயர சம்பவம் நடந்த ஒருவாரத்திற்குள் அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

1 comment:

  1. Violence like this is connected to the genes.

    ReplyDelete