இலங்கையின் கல்விக்கு 4590 மில்லியன் ரூபா அவுஸ்ரேலிய அரசு உதவி
இலங்கையின் கல்வி மேம்பாட்டிற்கு 4590 மில்லியன் ரூபா வழங்குவதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் முன்வந்துள்ளதாக இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமென்றை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார்.மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வருகைதந்த அவர் கொள்ளுப்பிட்டி சாந்த அந்தோனி மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எமது அரசாங்கம் இலங்கைக்கு 4590 மில்லியன் ரூபாவை கல்விக்காக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை கல்வித்துறையை மேம்படுத்தும் வகையிலேயே இந்த நிதியை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
அத்துடன், மனிதக் கடத்தலை கட்டுப்படுத்துவது, சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தக உறவுகள் ஆகியவை தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளோம்.
தெற்கு ஆசியாவுக்கான விஜயத்தை முதல் தடவையாக மேற்கொள்ளவுள்ள இவர், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உதவி குறித்தும் முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
0 comments :
Post a Comment