4வது டெஸ்ட் போட்டி:ஜடேஜா, இஷாந்த் ஷர்மா அபார பந்துவீச்சு
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நாக்பூரில் தொடங்கியுள்ள நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 199 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.பீட்டர்சன் 73 ஓட்டங்களுடனும், ட்ரோட் 44 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ஏனையோர் மிக குறைவான ஓட்டங்களையே பெற்றனர். பந்துவீச்சில் இந்திய அணியில் புதிதாக களமிறக்கப்பட்ட ஜடேஜா 2 விக்கெட்டுக்களையும் சாவ்லா 1 விக்கெட்டினையும் கைப்பற்றினார்.
இஷாந்த் ஷர்மா அதிரடியாக இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அவர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அலெஸ்டீர் கூக், கொம்ப்டன் இருவரையும் ஆட்டமிழக்க செய்தனர்.கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியிடம் இந்தியா மோசமான தோல்வியை தழுவியதால், இப்போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மகேந்திர சிங் தோனியின் கேப்டன்ஷிப், மூத்த வீரர்களுக்கும் அவருக்குமிடையிலான முறுகல் நிலைமை குறித்தும் ஊடகங்களில் பெரிதும் அலசப்பட்டிருந்தது. இப்போட்டியில் இந்தியாவை வெற்றி பெறச்செய்வதன் மூலமே தோனி தனது டெஸ்ட் கேப்டன் தரத்தை நிலையாக தக்க வைத்திருக்க முடியும் என்கிறார்கள் விமர்சகர்கள்.
0 comments :
Post a Comment