Thursday, December 27, 2012

வரலாறு பதிக்கிறது வவுனிக்குளம்!

வடக்கின் இரண்டாவது பெரிய குளமான வவுனிக்குளம் சரித்திரத்தில் முதல் முறையாக மூன்று அடிக்கு வான்பாய்வதுடன் மழை நீடித்தால் மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது
நாட்டில் நீடிக்கும் காலநிலை மாற்றத்தால் நாட்டின் அனைத்து பகுதிகளும் மழை வெள்ளத்தில் மிதக்கிறது இந்த சமயத்தில் வடக்கின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என எல்லாப்பகுதியிலும் உள்ள குளங்கள் வான் வான் பாய்வதுடன் சில குளங்கள் உடைப்பெடுக்கும் நிலை தோன்றியுள்ளது.

இந்த நிலைமையில் கடந்த காலங்களில் இரண்டரை அடிக்கு மேல் வான்பாய்ந்த வவுனிக்குளம் வரலாற்றில் முதன்முறையாக மூன்று அடிக்கு மேல் வான்பாய்வதுடன் வான் பாயும் தாழ் நிலப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும்பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதுடன் மழை நீடித்தால் இன்னும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment