Wednesday, December 5, 2012

34,000 ஓட்டங்கள் எனும் புதிய மைல்கல்லை அடைந்தார் சச்சின் டெண்டுல்கர்!!

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கொல்கத்தாவில் தொடங்கியுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி யின் சார்பில் நீண்ட நாட்களுக்கு பின்னர் சச்சின் டெண்டுல்கர் அரைச்சதத்தை கடந்துள்ளார்.மேலும் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 34,000 ஓட்டங்கள் எனும் புதிய மைல்கல்லையும் அடைந்துள்ளார். இதுவே கிரிக்கெட் உலகில் பெறப்பட்ட அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாகும்.

அவரது 23 கால கிரிக்கெட் வாழ்க்கையில், 192 டெஸ்ட் போட்டிகளில் 15560 ஓட்டங்களையும், 463 ஒரு நாள் போட்டிகளில் 18,426 ரன்களையும் பெற்றுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்ததே சச்சின் இறுதியாக பெற்றுக்கொண்ட ஓட்ட எண்ணிக்கையாகும்.

தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சார்பில் கௌதம் கம்பீர் 60 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஷேவாக் 23 ஓட்டங்கள் பெற்றிருந்த போது ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார். புஜாரா 16 ஓட்டங்களுடனும் விராத் கோலி 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் ஓரளவுக்கு ஃபோர்முக்கு திரும்பியுள்ள சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் சற்று முன்னர் வரை 56 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

அவருடன் இணைந்து துடுப்பெடுத்தாடி வரும் யுவராஜ் சிங் 14 ஓட்டங்களை பெற்றுள்ளார். பந்துவீச்சில் பெனாசெர் 2 விக்கெட்டுக்களையும், ஆண்டரன் 1 விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர். இந்திய அணி சற்று முன்னர் வரை 4 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 182 ஓட்டங்களை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment