பொங்கல் தினத்தை முன்னிட்டு புனர்வாழ்வை முடித்துக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 313 ஜனவரி மாதம் விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஸ்குமார் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் விடுதலை செய்யப்படும் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்ட அவர் விடுதலை செய்யப்படவுள்ள 313 பேரில் 10 பேர் பெண்கள் என அவர் குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில் யுத்தத்திற்கு பின் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த முன்னாள் போராளிகள் 11,699 பேர் ஒரு வருட புனர்வாழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இவர்களில் இதுவரை 10,976 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி 313 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர் இவர்களையும் விடுதலை செய்தால் புனர்வாழ்வு முகாம்களில் 410 முன்னாள் போராளிகளே எஞ்சியிருப்பர் என சதீஸ்குமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment