Wednesday, December 26, 2012

300,000 எட்டியது தனிநபர் கடன்!

இலங்கையில் தனிநபர் ஒருவருக்கான கடன் சுமை 308,171 ரூபாவை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுவதுடன் கடந்த வருடம் இந்தத் தொகை 245,980 ரூபாவாக இருந்தாக குறிப்பிம் தரவுகள் தனிநபர் கடன் என்ற அடிப்படையில் இலங்கை அரசுக்கு செலுத்த வேண்டிய கடன்தொகையை மொத்த சனத்தொகையால் வகுத்த நிலையிலேயே இந்தத் தொகை கணிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் சனத் தொகை 2012 ஆம் ஆண்டில் 20, 277, 597 ஆகும். இந்தநிலையில், அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை 5133 பில்லியன் டொலர்களாக காணப்பட்டதுடன் இது கடந்த 8 மாதகாலப் பகுதிக்குள் 1,115.6 பில்லியன் தொகையில் இருந்து 6,248.9 பில்லியன்களாக அதிகரித்துள்ளதுடன் உள்நாட்டுக்கடன் 449 பில்லியன்களால் அதிகரித்து, 3,253 பில்லியனாக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டுக் கடன்கள் 666.5 பில்லியன்களில் இருந்து 28.6 வீதமாக அதிகரித்து, 2, 995.8 பில்லியன்களாக அதிகரித்துள்ளது இது தொடர்பில் பொருளியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்த போது நாட்டின் ஏற்றுமதி வருமானம், கடந்த 9 மாதங்களில் 8.3 வீதத்தால் அதிகரித்தபோது இறக்குமதி செலவுகள் 11.2 வீதத் தால் அதிகரித்ததன் காரணமாகவே அரசின் கடன் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடுகின்றனர்.

No comments:

Post a Comment