யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுவதற்காக 30 சுகாதாரத் தொண்டர்களை இணைத்துக் கொள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் புதிய கூட்டம் நேற்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற போது இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் காணப்படும் பணியாளர்களுக்காக பற்றாக்குறையினை நிவிர்த்தி செய்யும் முகமாகவே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் வைத்தியசாலைச் சிற்றுண்டிச்சாலை, ஆண், பெண் மருத்துவ தாதியர்களுக்கான விடுதி அமைப்பு தொடர்பாகவும் ஜந்து பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment