Wednesday, December 5, 2012

பிரதமர். துமிந்தவிற்கு 3மாத லீவு -பாராளுமன்றம் அங்கீராம்

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் பிரதமர் டி.எம்.ஜயரட்ன ஆகியோருக்கு மேலும் 3 மாத லீவு வழங்குவதற்கு நாடாளுமன்றம் இன்று அங்கீகாரமளித்துள்ளது. இவர்கள் இருவருக்கும் டிசெம்பர் மாதம் 22ஆம் திகதியிலிருந்து 3 மாத லீவு வழங்கப்படுகின்றது. முல்லேரியா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இதேவேளை, அமெரிக்காவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த பிரதமர் டி.எம்.ஜயரட்ன கடந்த வாரம் நாடு திரும்பினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்திற்கு வருகை தராதுவிடின் அவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தராது இருப்பதற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளாதுவிடின், 3 மாதங்களின் பின்னர் அவர் தனது ஆசனத்தை இழக்க நேரிடும்..

No comments:

Post a Comment