மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச தரப்பினரால் ஒத்தி வை;கக்பட்ட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை எதிர்வரும் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு அரசாங்க தரப்பு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு மாநகரசபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனைப்பற்று தென்மேற்கு, மண்முனைப்பற்று தெற்கு மற்றும் எருவில்பற்று, மண்முனை மேற்கு, கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று, ஏறாவூர்பற்று மற்றும் போரதீவுப்பற்று ஆகிய உள்ளூராட்சிமன்றங்களுக்கே இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதை அடுத்து கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி, மட்டக்களப்பு மாவட்டத்துக்குட்பட்ட 9 உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டிருந்தது.
இதன்படி இவ்வருடம் (2012) மார்ச் 17ஆம் திகதியில் இப்பிரதேசங்களுக்கான உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
இருப்பினும், தேர்தல் விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர், தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி இந்த தேர்தல்களை ஒரு வருடத்துக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த ஒரு வருட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதியுடன் முடிவடைகின்றதை அடுத்து, அத்திகதிக்கு முன்னர் அரசாங்கம் இந்த தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.
2008ஆம் ஆண்டு இடம்பெற்ற மட்டக்களப்பு உள்ளூராட்சிமன்ற தேர்தல்களின் போது, அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் போட்டியிட்ட சிவநேசதுறை சந்திரகாந்தன் (பிள்ளையான்), 9 உள்ளூராட்சிமன்றங்களில் எட்டு சபைகளில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment