2013-ஆஸ்திரேலிய தேர்தலில் போட்டியிடுவது உறுதி: 'விக்கி லீக்ஸ்' அசாஞ்சே
பல்வேறு நாட்டு அரசுகளின் இணையதளத்தில் உள்ள ரகசிய செய்திகளை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் 'விக்கி லீக்ஸ்' இணையதளத்தின் உரிமையாளர் ஜுலியன் அசாஞ்சே. ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் மீது ஸ்வீடன் நாட்டில் பாலியல் குற்றம் தொடர்புடைய வழக்கு நடந்து வருவதால், ஈக்வேடர் நாட்டில் தஞ்சமடைந்து வசித்து வருகின்றார்.
இந்நிலையில், 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தேர்தலில் செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக ஜுலியன் அசாஞ்சே அறிவித்துள்ளார். விக்கிலீக்ஸ் என்ற பெயரில் ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சியை தொடங்கி இந்த தேர்தலில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய நாட்டு சட்டப்படி அயல் நாட்டில் வசிக்கும் வேட்பாளராக போயிடப் போவதாக அவர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் புதிதாக அரசியல் கட்சி தொடங்க, ஒரு மாகாணத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள 500 பேர் பரிந்துரை செய்ய வேண்டும்.
தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தை விரும்பும் 1.7 மில்லியன் உறுப்பினர்களும், 2.1 மில்லியன் பேஸ் புக் ஆதரவாளர்களும், ஆஸ்திரேலியாவில் தனக்கு ஆதரவாக, இணையதளத்தின் வாயிலாக தேர்தல் பிரசாரம் செய்ய முன்வருவார்கள் என அசாஞ்சே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் அல்லது விக்டோரியா மாகாணத்தில் ஜுலியன் அசாஞ்சே போட்டியிடக்கூடும் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
1 comments :
He has the courage brave and cleverness.His efficient and sincere services needed to the people of the entire world.
Post a Comment