Monday, December 3, 2012

சுன்னாம் உப மின் நிலையம் 2013இல் செயற்படத் தொடங்கும்- மின்சார சபை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 3554 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் சுன்னாகம் உப மின் நிலைய நிர்மாணப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாடு பூராகவும் லக்சபானா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் கிளிநொச்சியிலும் சுன்னாகத்திலும் உப மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதன்பிரகாரம் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட உப மின் நிலையம் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு தற்போது செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கிளிநொச்சியில் இருந்து யாழ் குடாநாட்டு மின்சாரத்தை வழங்கும் நோக்கில் சுன்னாகம் மின்சார நிலையத்தில் இந்த உப மின்நிலையம் நிர்மானிக்கப்ட்டுவருகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 3,554 மில்லின் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த உப மின் நிலையம் 2013ஆம் ஆண்டு செயற்படத்தொடங்கும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com