சூறாவளியினால் பிலிப்பைன்ஸில் இதுவரை 200 பேர் பலி-மேலும் பலர் இடம்பெயர்வு
தென் பிலிப்பைன்ஸில் சூறாவளியினால் பாதிக்கப்பட்டு 200 பேர் வரையில் இதுவரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதோடு தொடர்ச்சியாக
வீசுகின்ற கடுமையான சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
'போபா' எனப் பெயரிடப்பட்ட இந்த சூறாவளி மின்டானோ பகுதியை தாக்கியபோது, கொம்பொஸ்ரலா பள்ளத்தாக்கு மாகாணத்தில் மாத்திரம் குறைந்தது 156 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மீட்புப் பணியாளர்கள் அந்தப் பகுதிகளைச் சென்றடைந்துள்ளனர். இந்த சூறாவளி காரணமாக பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஆயினும் தனியான இடங்களில் வாழ்கின்ற சமுதாயத்தினரை எட்டுவதில் கஷ்டங்கள் உள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த சூறாவளி தென் சீனாவின் கடலுக்கு இன்று வியாழக்கிழமை நகர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment