அமைச்சரை கொல்ல திட்டம் தீட்டிய பெண்ணுக்கு 20 வருட கால கடூழிய சிறைத்தண்டனை.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை படுகொலை செய்ய திட்டம் தீட்டிய யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்த ராசலிங்கம் தாமரைவதனி என்பவருக்கு கேகாலை நீதிமன்ற 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
ஆன்று பாதுகாப்பு ஊடக பேச்சாளாராக அப்போது செயற்பட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 அம் திகதி முதல் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி வரை ரம்புக்கன பகுதியிலுள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது அவரை படுகொலை செய்வதற்கு குறித்த பெண் திட்டம் தீட்டியிருந்ததாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நிருப்பிக்கப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி மேனகா விஜேசுந்தர இவருக்கு 20 ஆண்டுகால சிறைத்தண்டனையை வித்தித்தார்.
வழக்கினை குற்றப்புலனாய்வு திணைக்களம் தொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment