உல்லாசப் பயணிகள் வருகை 1 மில்லியனைக் கடந்தது!
இலங்கைக்கான உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 1 மில்லியனைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்திசபை தெரிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டு 855,975 உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளனர் அதேவேளை 2012ஆம் ஆண்டு 950,000உல்லாசப் பயணிகளே வருகை தருவார்கள் என எதிர்பார்த்திருந்தபோதும் 1 மில்லியனுக்கும் அதிகமான உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இலங்கையின் உல்லாசத்துறை வளர்ச்சியடைந்துள்ளமையை எடுத்துக்காட்டுவதாகவும் சுற்றுலா அபிவிருத்திசபை சுட்டிக்காட்டியுள்ளது.
2013ஆம் ஆண்டு இலங்கைக்கு இத்தாலி, சீனா, ரஷ்யா, மலேசியா, உக்ரைன், அவுஸ்ரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து அதிகளவான உல்லாசப் பயணிள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் இந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 2014ஆம் ஆண்டு 1.6 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும், 2015ஆம் ஆண்டு 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும், 2016ஆம் ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும் எதிர்பபார்த்திருப்பதாக சுற்றுலா அபிவிருத்திச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
உல்லாசப் பயணிகளின் சொர்க்கமாக காணப்பட்ட மாலைதீவை வென்று தற்போது இலங்கை அதிகளலான உல்லாசப் பயணிகளை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment