ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய தடை மேலும் 180 நாட்களுக்கு நீடிப்பு
ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மேலும் 180 நாட்களினால் நீடிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார்.
இலங்கை, இந்தியா, சீனா, தென்கொரியா, தென்னாபிரிக்கா, துருக்கி, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இந்த தடை நீடிப்பு விதிக்கப்பட்டுள்ளது
ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கான தடையுத்தரவினை புதுப்பிக்கும் நடவடிக்கையில் பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், கடந்த செப்டெம்பர் மாதத்தில் ஜப்பான் உள்ளிட்ட 10 ஐரோப்பிய நாடுகளுக்கான இந்த தடை உத்தரவினை 180 நாட்களால் நீடித்தது.
இதன் இரண்டாவது கட்டமாகவே நேற்றைய தினம் இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கான தடை உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment