மெக்சிகோ நாட்டில் பெரும் போதைப்பொருள் கும்பல்கள் மற்றும் திட்டமிட்ட தாக்குதல் கும்பல்காறர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோமெஸ் பலாசியோ நகரின் சிறைச்சாலையை கைதிகள் உடைத்து தப்பிக்க முயன்றபோது கைதிகளுக்கும் சிறைக்காவலர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 17 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் இது போன்ற சம்பவங்கள் மெக்சிகோ சிறைச்சாலைகளில் சாதரணமாக நடக்கக்கூடிய ஒன்று என்று சொல்லப்படுகிறது. இதேசமயம் கடந்த 10.12.2012 மெக்சிகோவில் வன்முறையை கட்டுப்படுத்த புதிய தேசிய போலீஸ் காவல்படை உருவாக்கப்படும் என்று அதிபர் நீட்டோ அறிவித்திருந்த நிலையிலேயே இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
மெக்சிக்கோ நாட்டின் சிறைகளில் கைதிகள் நிறம்பி வழிவதால் சிறையில் இவ்வாறு அடிக்கடி கலவரத்தை ஏற்படுத்தி பலர் தப்பித்தும் சென்றுவிடுவது சாதாரணமாக நடைபெறும் நிகழ்வு என சொல்லப்படுவதுடன், மெக்சிகோவில் உள்ள சிறைத்தண்டனை முறையில் மாற்றம் வேண்டுமென மனித உரிமை அமைப்புகள் எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment