வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 யுவதிகளில் 12 பேர் தளத்திற்கு திரும்பினர்.
இராணுவ பேச்சாளர்.
அண்மையில் கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து இலங்கை இராணுத்தில் இணைந்து கொண்ட தமிழ் யுவதிகளில் சிலர் சுகயீனம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களது நிலைமை தொடர்பாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நுவான் வணிகசேகராவை இலங்கைநெற் தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த திங்கட்கிழமை 14 பேர் நோயுற்றதாகவும் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 பேர் நேற்று மீண்டும் பயிற்சி தளத்திற்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவர்கள் என்ன நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் எனக்கேட்டபோது, இராணுவப் பயிற்சிகளின்போது ஒவ்வாமை காரணமா பல்வேறு விதமான நோய்களுக்கு உள்ளாவது பொதுவான விடயம் எனவும் தானும் இவ்வாறான கஷ்டங்களுக்கு முகம்கொடுத்தே தனது பயிற்சியை முடித்து வெளியேறியதாகவும்
கூறினார்.
இப்பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என இணையத்தளங்களில் வெளிவருகின்ற செய்திகள் தொடர்பாக வினவியபோது, இக்குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாக தெரிவித்த அவர், அரசியல் லாபம் தேடும் சில சக்திகளால் புனையப்படும் உண்மைக்கு புறம்பான கட்டுக்கதைகள் இவை என்றார்.
0 comments :
Post a Comment