13ம் திருத்தத்திற்கு பதிலாக மாற்று யோசனையை முன்வைக்கும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள்.
அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தினை தடை செய்வது அல்லது மாற்றம் செய்வது என்ற கருத்து தொடர்பில் முரண்பாடான கருத்துக்கள் நிலவிவரும் இத்தருணத்தில் ஆழும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை முறைக்கு புதிய யோசனை ஒன்றை முன்வைக்க தீர்மானித்துள்ளனர்.
குறித்த யோசனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் இவ் யோசனையின் மூலம் இலங்கைக்கு புதிய மாகாண சபை முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஐ.ம.சு. முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தை தெரிவித்துள்ளார்.
லொஹான் ரத்வத்தை முன்னாள் பாதுகாப்பு பிரதி அமைச்சரான அனுருத்த ரத்வத்தையின் புத்திரர் என்பது யாவரும் அறிந்தது.
0 comments :
Post a Comment