Wednesday, December 12, 2012

12-12-12 இல் திருமணம் செய்யத்துடிக்கும் ஜோடிகள்

உலகில் அதிக திருமணங்கள் நிகழ்ந்த ஒரு நாளாக இன்றைய தினம் வரலாற்றில் இடம்பிடிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு காரணம் 12-12.2012 ஆம் திகதியான இன்றைய தினம் பலர் தாம் திருமண பந்ததில் இணைந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவதாகும்.

ஐரோப்பா உட்பட கிழக்காசிய நாட்டினர், இன்றைய திகதி, மாதம், வருடம் எல்லாம் 12ம் எண்ணில் வருவதை அதிர்ஷ்ட நாளாக கருதுவதால் இந்நாளில் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நாளில் நல்ல காரியங்கள் செய்தால் அது வெற்றியடையும் என்றும் நினைப்பதால் திருமணம் செய்து கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறார்கள். எனவே பல நாடுகளிலும் நாளை ஆயிரக்கணக்கான ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

சிங்கப்பூர், ஹொங்ஹாங், தாய்லாந்து போன்ற நாடுகளில் இன்றைய தினத்தில் திருமணம் செய்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். ஹொங்ஹாங்கில் மட்டுமே இன்றைய தினம் 696 பேர் திருமணம் செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்தில் முன் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல சிங்கப்பூரிலும் திருமணம் செய்ய விரும்பி 540 பேர் பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இது தவிர சீனா, ஐரோப்பிய நாடுகளிலும் இன்றைய தினம் திருமணம் செய்ய பலர் முடிவு செய்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com