வேக்கட்டுப்பாட்டை இழந்து நீரில் வீழ்ந்த வாகனம் 11 பள்ளிக் குழந்தைகள் சீனாவில் பரிதாப மரணம்
சீனாவில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வான் கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கிக்ஸி நகருக்கு அருகே, இன்று குழந்தைகளை ஏற்றிச் சென்ற வான் கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் விழுந்து மூழ்கியது.
இந்த விபத்தில் உயிரிழந்த. இவர்கள் அனைவரும் 4 வயது முதல் 6 வயது வரைக்கும் உட்பட்டவர்கள்.
மேலும் இவ்விபத்தில் 4 குழந்தைகள், ஒரு ஆசிரியர் மற்றும் ஓட்டுநர் மட்டுமே பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
குழந்தைகளை ஏற்றிச் சென்ற வானில் 7 பேர் மட்டுமே செல்ல முடியும். ஆனால் அதைவிட அதிகமான நபர்கள் பயணித்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment