கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் 10ஆம்,14ஆம் திகதிகளில் போராட்டங்கள் -த.தே.ம.மு
கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும்,;, வடக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் விடுதலையை வலியுறுத்தியும் எதிர்வரும் 10ம், 14ம் திகதிகளில் கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற 6 கட்சிகள் இணைந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இச்சந்திப்பின் போது சர்வதேச மனிதவுரிமைகள் தினமான எதிர்வரும் 10 ம் திகதி கிளிநொச்சியிலும், 14ம் திகதி வவுனியாவிலும் சர்வதேசத்தின் கவனத்தையீர்க்கும் வகையிலான போராட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கட்சியினர் குறிப்பிட்டனர்.
1 comments :
Windows of opportunities are very rare.It is better to make use of the opportunity.Bird in the hands is worthy than two in the bush
Post a Comment