வெளிநாடுகளில் இருந்த சுற்றுலா விசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்த 1000 பேர் இந்தவருடம் நாடுகடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதுடன் நாடு கடத்தப்பட்ட அனைவரும் சுற்றுலா வீசாக்கள் மூலம் நாட்டுக்குள் வந்து பாலியல் தொழில்களில் ஈடுபட்டவரும், கையடக்க தொலைபேசிகளை வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டடு வந்தவர்களே அதிகமானவர்கள் என தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டவர்களில் அதிகமாநவர்கள் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் பெண்களை வரவழைத்து அவர்களை 25 ஆயிரம் ரூபாவுக்கும் மேலாக பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யும் ஒரு குழுவும் அடங்குவதாக குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் தமக்கு வளங்கப்பட்ட வீசா நடைமுறைகளை மீறியவர்கள் என்ற வகையில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்திலும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படு அதிக தண்டனை வழங்கப்படு நாடுகடத்தப்படுவார்கள் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment