விடுமுறை நாட்களில், பெயின்டிங், வெள்ளை அடிப்பு வேலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்.
இந்தியாவிலே ஒரு வீட்டில் வெள்ளையடிப்பு நடந்தது. வெள்ளையடிக்க சென்றவர்களில் ஒருவரை பார்த்து வீட்டுக்காரனின் பேத்தி வீட்டிற்குள் ஓடினாள். என்னவென்று விசாரித்தார் பேரனார். அதற்கு அவள் 'இவர் எங்கள் வகுப்பாசிரியர். என்னை பார்த்தால் அவருக்கு சங்கடமாக இருக்கும்...' என்றாள்.
விடயத்தை விசாரித்தார் வீட்டுக்காரன். அதற்கு பதிலளித்த அவர் தான் ஒரு எம்.ஏ. பட்டதாரி என்றும் அவரின் பேத்தி படிக்கும் பள்ளியில் வேலை பார்ப்பதாகவும் கூறினார்.
மேலும் 'அங்கு தரும் மாத சம்பளம் குடும்பம் நடத்தப் போதாது. அதனால் விடுமுறை நாட்களில் எனக்குத் தெரிந்த பெயின்டிங் வெள்ளை அடிப்பு போன்ற வேலைகளுக்குச் செல்கிறேன். தினமும் 400 ரூபாய் கிடைக்கிறது. இந்தத் தொழில் செய்வதற்காக நான் வெட்கப்பட வில்லையிங்க செய்யும் தொழில்தானுங்களே தெய்வம்...' என்றாராம் .
அவரை ஓர் நல்லாசிரியனாக ஏற்றுக்கொண்டாராம் வீட்டுக்காரன்.
நாம் இச்செய்தியை கொண்டுவந்திருப்பதன் நோக்கம். இன்று வடகிழக்கு எங்கே செல்கின்றது. நமது பட்டதாரிகளினதும் ஆசிரியர்களினதும் நிலைமையை மேலுள்ள நிலைமையுடன் ஒப்பிட்டு பார்த்தால்... எப்படி இருக்கும்:
தயவு செய்து தடியோ செருப்போ எடுக்க வேண்டாம்.
0 comments :
Post a Comment