காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைக்கு பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது- சமரசிங்க
கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடாபில் விசாரணை நடாத்த தேசியப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவாவில் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 14ம் அகில கால மீளாய்வு அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போதல்கள் 5600 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. உண்மையில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் அவசியமானவை.
பொதுமக்கள் மீது அரசாங்கத் தரப்பு தாக்குதல் நடத்துவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை . மனித உரிமை உறுதிப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பில் உள்நாட்டு ரீதியான நடவடிக்கைகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை தனிமைப்படுத்த மதிப்பீடு செய்யக் கூடாது - கள நிலவரங்கள் காலச் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனித உரிமை நிலைமைகளை கவனத்திற் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்
இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்துவது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படத் தயார். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து 99 நாடுகளும் காட்டி வரும் கரிசனை பாராட்டுக்குரியது.
2008ம் அமர்வுகளில் உறுதியளிக்கப்பட்டது போன்று மனித உரிமை தொடர்பில் தேசிய செயற்திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது
தொழிலாளர்களின் உரிமைகள்- கைதிகளின் உரிமைகள்- இடம்பெயர் மக்களின் உரிமைகள்- மகளிர் உரிமைகள்- சிறுவர் உரிமைகள்- சட்டவிரோத குடியேற்றங்களை தடுத்தல்- மனித உரிமை மீறல்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மனித உரிமைகளை மேம்படுத்த தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது..
யுத்தம் இடம்பெற்ற உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே இலங்கையிலும் யுத்தத்தின் பின்னர் பல்வேறு காரணிகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவிகளிலிருந்து- அபிவிருத்தி உதவிகளுக்கு இடம் நகர்வதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்..
நாட்டில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு வழிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளதோடு கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்- தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாக சுமத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment