இயேசு என்று கூறியபடி மனைவியின் தலையை வெட்டி எறிந்த கணவன்
ஜேர்மனி நகர் ஒன்றில் 'நான் இயேசு கிறிஸ்து' என்று கூறிய படியே, மனைவியின் தலையை வெட்டி எறிந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜேர்மனியின் பெர்லின் நகரை சேர்ந்த நபரொருவர், தன்னை கடவுள் என நினைத்து கொண்டு மனைவியை மிக கொடூரமான முறையில் கொலைசெய்துள்ளார்.
முதலில் தன்னுடைய மனைவியை கம்பியை கொண்டு பலமாக தாக்கியதுடன், கத்தியால் தலையை வெட்டி எறிந்துள்ளார். இதனையடுத்து அவரது சடலத்தை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.
தகவலறிந்த பொலிசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். விசாரணையில், இவர் ஒரு மனநோயாளி என்பதும், ஆறு மாதமாக நோய்க்கு எவ்வித சிகிச்சையும் எடுத்து கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நபர், தான் செய்தது மிகப் பெரிய தவறு என்றும், தன்னுடைய வெறித்தனமான செயலால் குடும்பமே சிதைந்து விட்டது என்றும் கூறியுள்ளார்.
1 comments :
It is a surprsie how this accused escaped from the eyes of the average people.In case if he belongs to a christian congregation or his relatives,neighbours had their duty to send him compulsorily to a psychiatrist.Psycho analysis,would have treated him.A poor woman got killed because of the neglgience.This is really a good lesson for us.
Post a Comment