சரவணபவானுக்கு குழிதோண்டும் சிறிதரன்.
மண்டையன் குழுவின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் நுழைந்தவர் சிறிதரன். பின்னர் சுரேசுக்கு கம்பி நீட்டிவிட்டு தமிழரசுக் கட்சியில் இணைந்தார். தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் இவரின் சுழியோடல்கள் ஏராளம். கிளிநொச்சியில் அறிவகம் எனும் ஒரு அழிவகத்தை உருவாக்கி மெல்ல மெல்ல நகர்ந்து தற்போது அழிவகத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி காரியாலயம் என்றும் கூறுகின்றாராம். இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சிகளிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் வித்தியாதரன் அன்ட சரவணபவான் கொம்பனிக்கு குழிதோண்ட ஆரம்பித்துள்ளார் சிறிதரன். இது சும்மா குழி அல்ல கூடஇருந்தே தோண்டும் குழி. சுரவணபவான் அரசியலுக்கு நுழைவதற்கும் அதில் நிலைப்பதற்கு ஒரே மூலப்பொருள் அவரின் உதயன் பத்திரிகை என்பது யாவரும் அறிந்தது. தற்போது உதயனுக்கு வேட்டு வைக்க வெளிக்கிட்டுள்ளார் சிறிதரன். வன்னியில் தேசத்தின் குரல் எனும் பத்திரிகை ஒன்றை வெளியிட ஆரம்பித்துள்ளார்.
இது தொடர்பாக நண்பர்களிடம் பேசிய சிறிதரன் கொஞ்சநாள் பொறுத்திருந்து விளையாட்டை பாருங்களேன் 'சரவணபவான் படுக்கப்போறார் , உதையனைத் தேடுவார் யாரும் இருக்காது' என்றாராம். ஆனால் இப்பத்திரிகை உதயன் அச்சகத்திலிருந்தே அச்சிடப்படுவதாக அறியக்கிடைக்கின்றது. உதயன் அச்சகத்திலே அச்சிட்டு உதயனுக்கு விளையாட்டு காட்ட வெளிக்கிட்டுள்ளார் சிறதரன்.
2 comments :
Both are in the same track,the best deceiver may win the race.
சப்ரா விடையத்தை ஏன் யாரும் தோண்டவில்லை ? எதிர்கால வடக்கு முதலமைச்சர் என்று சொல்லும் டௌக்லஸ் ஏன் ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை ? இதுக்கு நடவடிக்கை எடுக்கா விட்டால் அவரில் முதலமைச்சர் கனவு , கனவாகாதான் இருக்கும்.
Post a Comment