Friday, November 2, 2012

த.தே.கூ வசமுள்ள நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் திருட்டு மாடு பிடித்து மாட்டினர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் திருட்டு மாடு பிடித்தபோது பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் அரியாலை கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.இதில் நல்லூர் பிரதேச சபையின் பணியாற்றும் இரண்டு ஊழியர்களே மடக்கி பிடிக்கப்பட்டவர்களாவார்கள்.

குப்பை கொட்டுவதற்காக உழவு இயந்திரத்தில் சென்ற இவர்கள் அப்பகுதியில் கட்டாக்காலியாக நின்ற மாடுகள் இரண்டை பிடித்து ஏற்றிச் செல்ல முற்பட்ட போது பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் யாழ்ப்பாணப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள உள்ளுராட்சி சபைகளில் காணப்படும் நிர்வாக சீர்கேடுகள் தான் இவற்றிற்கு காரணம் என மக்கள் தெரிவிக்கின்றனர்

1 comments :

Anonymous ,  November 2, 2012 at 7:44 PM  

Brainless petty thieves of the same group get caught easily whereas the operators easily escape.However it has come to the light.General public may have learnt a good lesson
what's happening and how it is happening.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com