தமிழ் கைதியொருவர் சுகயீனத்தால் சிறையில் மரணம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதி ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டே இவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் சிலாபத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான என்டனி ஜோசப் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார் இவர், கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை பிற்பகல் சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட இவர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளார்.
0 comments :
Post a Comment