சட்டவிரோதமான கடலட்டை பிடித்த ஒன்பது பேர் மாட்டினர்
யாழ்.குருநகர் பகுதில் சட்டவிரோதமான முறையில் றோலர் படகுகளைப் பயன்படுத்தி கடலட்டை பிடித்த ஒன்பது பேரைக் மண்டைதீவுக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அனுமதியின்றி இவர்கள் அனைவரும் கடல் அட்டை பிடித்ததோடு கரை திரும்பிக் கொண்டிருந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டு கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பிடிப்பதற்கு பயன்படுத்திய படகு மற்றும் வலை என்பனவும் மீட்கக்ப்பட்டுள்ளது.
இதேவேளை வேளை கடந்த இரு தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு 15பேர் கைது செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment