மதுபோதையில் விசாரணை செய்ய சென்று தரும அடிவாங்கிய பொலிஸார்
ஹொரண, மொரஹஹேன பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் பொலிஸார் உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.யாலஹேலேவத்தை என்னும் இடத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இம்முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக சென்ற பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலேயே நேற்று இரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
வுpசாரணைக்கு சென்ற பொலிஸார் மது போதையில் இருந்ததாலேயே இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் பொலிஸார் மூவர் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர் இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை மதுபோதையில் சென்றதாகக் கூறப்படும் பொலிஸார் மூவரும் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment