அமெரிக்க நகரங்களைத் தாக்கிறது ஏதேனா புயல் -அடுத்தடுத்தது வில்லங்கம்
அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கை ஏதேனா புயல் தாக்கியுள்ளது.
சான்டி புயலின் பாதிப்பிலிருந்து மீளாத நிலையில் இருந்து வரும் நியோக்க நகரை அடுத்தடுத்து புயல் தாக்கியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் மையம் கொண்டிருந்த சான்டி புயல் அமெரிக்காவை தாக்கியதில், 13 அடி உயரத்திற்கும் மேற்பட்ட அலைகள் எழும்பி நகரங்களுக்குள் புகுந்தன.
இதனால் நியூயார்க், நியூஜெர்ஸி மாகாணங்கள் வெள்ளத்தின் மிதந்தன. இந்த பாதிப்பில் இருந்த இன்னும் மீளாத நியூயார்க், நியூஜெர்சியை தற்போது ஏதேனா என்ற மற்றொரு புயல் தாக்கியுள்ளது.
இந்த புயலால் இம்மாகாணங்களில் கனமழை, பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன் பலத்த காற்றும் வீசுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கின்றன.
இந்த புயலின் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மணிக்கு 60 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும், நியூ இங்கிலாந்து பகுதியில் 6 முதல் 10 இன்ச் அளவுக்கு பனிபொழியும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நியூயார்க், நியூஜெர்ஸி, கனக்டிகட், பென்சில்வேனியா மற்றும் மசாசுசட்ஸில் மழை மற்றும் பனி பொழிவால் 1,710 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
2 comments :
Nature plays good and at times bad. It's in the hands of mighty God.Everybody knows He has the unthinkable and unimaginable super power than anything else in the world.
Yes , Nature need to punish USA
Post a Comment