அரியாலையில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு
யாழ். அரியாளை, முள்ளி பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் விசேட அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளன என யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பேரேரரா தெரிவித்துள்ளார். விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே நேற்று மாலை இவை மீட்கப்பட்டுள்ளன.முள்ளி பகுதியிலுள்ள மாதா கோயிலுக்கு பின்னாலுள்ள பிரதேசத்தியே இந்த ஆயதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, நான்கு மோட்டார் குண்டுகளும் 30 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த குண்டுகள் மீட்கப்பட்ட இடத்திலேயே விசேட அதிரடி படையினரால் செயலிக்க செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அண்மையில் மணியந்தோட்டப்பகுதியிலும் கிணறொன்றிலிருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்ககப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment