சீனாவில் ஊழலை ஒழிக்க வேண்டும் -சீனஅதிபர்
சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஊழலை ஒழிக்காவிட்டால், கட்சி சீர்குலைந்து விடும். ஊழலை ஒழிப்பதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சி இடைவிடாமல் செயலாற்ற வேண்டும். மேலும், கட்சியினரிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என சீன அதிபர் ஹூ ஜின்டாவ் புதிய அதிபர் தெரிவுக்கான நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தெரிவிக்கையில்,
ஊழலுக்கு எதிரான முயற்சி மற்றும் அரசியல் ஒற்றுமை மட்டுமே, கட்சியின் நீண்ட கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதில் நாம் தவறு செய்வோமானால், அது கட்சிக்கு மிகவும் கேடாக அமைவதுடன், கட்சி சீர்குலையவும் வாய்ப்பாக அமைந்து விடும் என்று தெரிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவரே சீன அதிபராகவும் பதவி வகிக்கிறார். இந்நிலையில், பத்து ஆண்டுகளுக்குப்பிறகு புதிய தலைவர் தேர்வு பீஜிங்கில் உள்ள கிரேட் ஹாலில் நடந்தது.
இதில் புதிய தலைவராக, தற்போதைய துணை அதிபர் ஜி ஜிங்பிங் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதே போல், பிரதமராக, தற்போதைய துணை பிரதமர் லி கெயூகாங் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment