Friday, November 9, 2012

நேரத்திற்கு நோயாளர்களை அனுப்பி வைக்காத யாழ்.போதனா வைத்தியசாலை

யாழ்.போதனா வைத்தியசாலையின் உள்ளக விடுதிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறும் நோயாளர்களை உரிய நேரத்திற்கு அனுப்பி வைக்க நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லையெனக் குற்றஞ் சாட்டப்படுகின்றது.குறிப்பாக உரிய அனுப்பி வைக்காத காரணத்தினால் வைத்தியசாலையின் மருந்தகத்தில் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியவில்லையென்று பாதிக்கப்பட்ட நோயாளர்கள் சில கவலை தெரிவித்துள்ளனர்.

வாரத்தில் வழமையான நாட்களில் இவ்வாறான பிரச்சினைகள் எவையும் ஏற்படுவதில்லை. மாறாக சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் யாழ்.போதனா வைத்தியசாலையின் மருந்தகம் மதியம் ஒரு மணியுடன் தனது சேவையினை நிறுத்திக் கொள்வதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

பொது விடுமுறை நாட்களிலும் இவ்வாறே காலை 8 மணிக்கு திறக்கப்படும் மருந்தகம் 10 மணிக்கு மீண்டும்; மூடப்படுகின்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் உள்ளக விடுதியில் சிகிச்சை பெற்று வெளியேறுபவர்களை ஒரு மணிக்கு பின்னரே விடுதியிலிருந்து வெளியேற வைத்தியசாலை நிர்வாகம் அனுமதிக்கின்றது. இதனால் நோயாளர்கள் மருந்தகத்தில் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக அதிக விலை கொடுத்து தனியார் மருந்தகங்களிலேயே மருந்துகளை கொள்வனவு செய்கின்றனர்.

இதனால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பொது மக்கள் பெரிதும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். எனவே வைத்தியசாலை நிர்வாகம் இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 comments :

Anonymous ,  November 9, 2012 at 11:41 AM  

This reflects the poor administration
of the hospital authorities,before you get blame from out side why not you the administrators concentrate
your mind in proper administration,because hospital is the place where the patients flooded in to cure them from their illnesses. specially the poor.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com