பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் டிசம்பர் 25-ந் தேதி முதல் ஜனவரி 6-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி (பெங்களூர், ஆமதாபாத்), மூன்று ஒரு நாள் போட்டிகளில்
(சென்னை, கொல்கத்தா, டெல்லி) விளையாட உள்ளது. இந்த போட்டியை நேரில் பார்க்க சுமார் 5 ஆயிரம் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முந்தைய காலங்களில் இப்படி போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் பலர் பாகிஸ்தான் திரும்பாமல் இங்கேயே தங்கி விட்டனர். இதனை கருத்தில் கொண்டு இந்த முறை விசா நடைமுறையில் கடுமையான விதிகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் விசா கேட்டு விண்ணப்பிக்கும் ரசிகர்களுக்கு போட்டி நடக்கும் எல்லா இடங்களுக்கும் செல்லும் வகையில் ஒட்டுமொத்தமாக விசா வழங்கப்படமாட்டாது என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகு தான், அடுத்த போட்டி நடக்கும் நகருக்கு செல்வதற்கான விசா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment