பஸ் வண்டிகளுக்கான தற்காலிக அனுமதிப் பத்திரங்கள் ரத்து.
பிரயாணிகள் பஸ் வண்டிகளுக்காக வழங்கப்பட்டுள்ள சகல தற்காலிக அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்யப்போவதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சபை தெரிவித்துள்ளது. பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மாவட்ட மட்டத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் செயலமர்வில், ஆணைக்குழு சபையின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பஸ் வண்டிகளுக்காக தற்காலிக பிரயாணிகள் அனுமதிப்பத்திரம், விசேட தேவைகளுக்கமையவே வழங்கப்பட்டது. ஒரு சில பஸ் உரிமையாளர்கள், இந்த தற்காலிக பிரயாணிகள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி, நீண்டகாலம் பிரயாணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக, முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனை கருத்திற்கொண்டே,
இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment