Tuesday, November 6, 2012

விஐபி க்கள் பாதுகாப்பு பிரிவின் இயக்குனர் மாரடைப்பால் மரணம்.

விசேட அதிரடிப் படையினரின் பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவின் இயக்குனர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாணயக்கார மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார். 37 வருடகாலமாக பொலிஸ் திணைக்களத்தில் கடமை ஆற்றிய இவர் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் இயக்குனராக நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பதற்கு பெரும் அற்பணிப்புடன் செயற்பட்டவராவார்.

விசேட அதிரடிப்படையில் கிழக்கு பிரதேசத்தில் கடமையாற்றியபோது புலிகளின் பல்வேறு தாக்குதல்களில் சிங்குண்டு பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் இறக்கும் போது வயது 54 ஆகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com